சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞர் செம்மொழித் தமிழ் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்களை முதல்வர் வெளியிட்டார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணையை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதை வழங்கினார் முதல்வர்
0