சென்னை: சென்னையில் ஆக.18இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆக. 18 மாலை 6.50-க்கு நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளனர்.