சென்னை: கலைஞர் 100-ஐ பல்வேறு சார்பு அணிகளும் கொண்டாடினர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். திமுக பொறியாளர் அணி சார்பில் நடந்த விழாவில் இளைஞர்கள் பங்கேற்று முழங்கியதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். பல லட்சம் மாணவர்கள், பொறியாளர்களுக்கு இணைப்புப் பாலமாக திமுக பொறியாளர் அணி சார்பில் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. My Roots செயலி மற்றும் செயல்திட்டம் குறித்த விளக்க காணொளியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.