சென்னை : கலைஞர் எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அனுமதி அளித்த தனது தாயார் ராசாத்திக்கு கனிமொழி எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். கலைஞர் நூல்களை நாட்டுடைமையாக்குவதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் கனிமொழி. கலைஞரின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவிலான மக்களிடம் சென்றுசேரும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.