சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வரும் 14-ல் பயனளாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்.15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இம்மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.