திருமலை : ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஏலேறு அணையில் வந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதி பித்தாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லப்ரோலுவில் உள்ள ஜெகன்னா காலனிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேசி நிலவரத்தை கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் துணை முதல்வர் பவன்கல்யாண் கூறியதாவது:
காக்கிநாடா கலெக்டர் ஷண்மோகன் சகிலியிடம் ஏலேறு அணையின் நிலை குறித்து அவ்வப்போது பேசி வருகிறேன். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இந்த தொகுதி எம்.எல்.ஏ.என்ற முறையில் நதிநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வை வழங்குவேன்.
ஜெகன்னா காலனிகள் என்ற பெயரில் கடந்த அரசு செய்த தவறுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தவறுகளை எங்கள் ஆட்சியில் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது.
கொல்லப்ரோலுவில் உள்ள ஜெகன்னா காலனி இடம் நீர்பிடிப்பு பகுதியில் வாங்கப்பட்டது. ₹30 லட்சம் ஏக்கர் நிலத்தின் சந்தை விலை இருந்தால் ₹60 லட்சம் கொடுத்து வாங்கினார். ஏலேறு அணையின் வெள்ள நிலவரத்தை அவ்வப்போது ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்குகிறோம். இன்று எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், மக்கள் படும் துன்பங்களை அறிந்து, சுயமாக பார்த்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என களத்திற்கு வந்துள்ளேன்.
முந்தைய ஆட்சியில் கிராம பஞ்சாயத்து முற்றிலும் நலிவடைந்து விட்டன. நிதி நிலை மோசமாக உள்ள எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு எனது சொந்த பணத்தில் உதவி செய்துள்ளேன். கிருஷ்ணா நதிக்கு செல்லும் புடமேறு ஆற்று கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஐதரபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் ஹைட்ரா போன்ற அமைப்பு ஏற்பாடு செய்வதற்கு முன் அவர்களுடன் பேச வேண்டும்.
புடமேரு பகுதியில் தெரிந்தோ தெரியாமலோ ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஏராளம். ஆக்கிரமிப்பு நிலம் என்று தெரியாமல் வாங்கியவர்களும் உண்டு. முதலில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அனைவரிடமும் பேசி நடவடிக்கை எடுப்பது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. நதி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் நதி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எதிர்பாராத கனமழையால் விஜயவாடாவில் இந்த நிலை ஏற்பட்டது. இந்த மழை மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது. விஜயவாடா வெள்ளப் பேரிடரில் இருந்து மீள சிறிது காலம் ஆகலாம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட, வெள்ளப் பேரிடரில் இருந்து மீள்வதற்கு காலம் எடுக்கும். முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இரவு பகலாக உழைத்து வருகிறார். அதிகாரிகளை எச்சரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.