சென்னை: கக்கன் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழ்நாடு முன்னாள் அமைச்சருமான பி.கக்கன் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் சங்கர் மூவீஸ் சார்பாக மேட்டுப்பாளையம் ஜோசப்பேபி தயாரித்து நடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகெங்கிலும் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து ஆணை பிறப்பித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.