ஸ்ரீஹரிகோட்டா: ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வானிலை மாற்றம் காரணமாக ககன்யான் சோதனை சற்று தாமதமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். கடலில் இறக்கப்பட்ட மாதிரி விண்கலம் கப்பற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படும். குறுகிய நேரத்தில் கோளாறை கண்டறிந்து உடனடியாக சரி செய்த குழுவினருக்கு வாழ்த்துகள் என தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.