டெல்லி: ககன்யான் மாதிரி விண்கலம் சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ககன்யான் திட்ட சோதனை வெற்றி இந்திய விண்வெளி பயணத்தில் நம்மை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ககன்யான் மாதிரி விண்கலம் சோதனையை வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இஸ்ரோவின் சாதனை இந்திய விண்வெளி பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ககன்யான் திட்டக் குழுவின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்புக்கு பாராட்டுகள் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.