*கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் மாணவர்கள் துவக்கி வைத்தனர்
கடையநல்லூர் : கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளே பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லப்பா, கூடுதல் வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய கிருஷ்ணமுரளி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையேற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பள்ளி ஆண்டுவிழாவின் போது கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக எம்எல்ஏ உறுதி அளித்திருந்தார். இதனையடுத்து நேற்று பள்ளி மாணவ மாணவிகளை வைத்தே பூமி பூஜையை கிருஷ்ணமுரளி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரெமினா என்ற குருவம்மாள் வரவேற்றார். நயினாரகரம் ஊராட்சி தலைவர் முத்தையா, அதிமுக மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இடைகால் செல்லப்பா முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்கள் புலிக்குட்டிபாண்டியன், கல்யாணகுமார், பாபு, வசந்தகுமார், ராகவன், உதயகணேஷ், மணிகண்டன், குமார், ஆசிரியைகள் ஜெசிந்தா, ராமலட்சுமி, கிருத்திகா, ஜெயலட்சுமி, ரஹ்மத்தம்மாள், ஆனந்தி, கலா நாச்சியார், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரதீப்குமார், பிரபு, அலுவலக பணியாளர்கள் ராம்குமார், வேலுச்சாமி மற்றும்சார்பு அணி நிர்வாகிகள் அரிராம், கோபிநாத், சந்திரகுமார், அப்துல்காதர் ஜெய்லானி, ராஜேஷ் பாண்டியன், திரவியம், ராம்பிரகாஷ், களஞ்சியம், கிளை செயலாளர்கள் வேல்சாமி பாண்டியன், சுப்பையா, ரமேஷ், பெரியசாமி, சங்கிலி, ராஜன், முத்தையா, மணி, மதி மற்றும் பத்மநாதன், சதாசிவம், துரைராஜ், பாக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.