தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் வெண்டை சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் வெண்டை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வெண்டை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். வெண்டை சாகுபடிக்கு வைகாசி, ஆனி, ஆடி ஆகிய பட்டங்களில் சாகுபடி செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் வெண்டை சாகுபடிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை சட்டிக் கலப்பையால் உழவு பணிகள் செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து உழவு செய்யப்பட்ட நிலத்தை 2 நாட்கள் நன்றாக காய விட வேண்டும். வெண்டை சாகுபடிக்காக எடுக்கப்பட்ட பாத்திகளில் சொட்டு நீர் குழாய்களை பொருத்தி பாத்திகளின் மீது பாலிதீன் மல்ச்சிங் ஷீட்டை விரிக்க வேண்டும். மல்ச்சீங் ஷீட் விரிப்பதால் நிலத்தில் களைகள் வராமல் தடுக்கலாம். மேலும் வயலில் பாய்ச்சப்பட்ட நீர்ஆவியாவதை தடுக்கலாம்.
இதேபோல் வெண்டை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் மல்ச்சிங் ஷீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். வெண்டை சாகுபடிக்கு பயன்படுத்தும் மல்ச்சிங் ஷீட்டை ஒவ்வொரு முறையும் சாகுபடி முடிந்தவுடன் சுருட்டி எடுத்து வைத்துவிடலாம்.பயன்படுத்தும் மல்ச்சிங் ஷீட்டின் இரு ஓரங்களிலும் 1 அடி இடைவெளியில் துளை எடுக்க வேண்டும். பின்னர்4 அங்குல ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். மேலும் துளைகளை ஜிக்ஜாக்காக முன்கோண நடவு முறையில் இருக்க வேண்டும். பிறகு 2 நாட்கள் தொடர;ந்து பாசனம் செய்ய வேண்டும். நீர்பாய்ச்சிய பின்பு பாத்திகள் நன்றாக ஈரமானவுடன் குழிக்கு 1 விதை வீதம் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பின்னர்தண்ணீர்பய்ச்ச வேண்டும்.
அதனை தொடர;ந்து வெண்டை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் ஈரப்பதத்தை பொறுத்து தண்ணீர்பாய்ச்சினால் போதும். மேலும் வெண்டை விதை விதைக்கப்பட்ட 5ம் நாளில் வெண்டை பயிர்முளைக்கத் தொடங்கும். பின்னர்நடவு செய்த 15ம் நாளில் அரை அடி உயரத்திற்கு வெண்டை செடிகள் வளர;ந்துவிடும். நடவு செய்த வெண்டை விதைகள் செடிகளாக வளர்ந்த 35ம் நாளில் பூக்கத்தொடங்கும். பிறகு 40 நாட்களுக்கு மேல் வெண்டைக்காய் காய்க்கத்தொடங்கும். பின்னர்45ம் நாளில் இருந்து 140ம் நாள் வரை வெண்டைக்காய்களை அறுவடை செய்யலாம்.
இதில் நடவு செய்யும் வெண்டை வதைகள் நல்ல விதைகளாக இருந்தால் 40 நாட்களில் அறுவடைகளை தொடங்கி 3 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஆனால் தரமில்லாத விதைகளால் இழைசுருட்டு போன்ற பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு அதிக மகசு+ல் கிடைக்காமல் நஷ்டத்தை ஏற்படுதும். குறிப்பாக தனியார்கடைகளில் ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் முதல் 3500 வரை விற்பனை செய்யப்படும் நல்ல விதைகளை நடவு செய்து சாகுபடி செய்தால், 3 மாதங்களுக்கு அறுவடை செய்யலாம். இதேபோல் ரூ.1500 முதல் 2000 வரை விற்பனை செய்யும் விதைகளை நடவு செய்து சாகுபடி செய்தால் 2 மாதத்திற்கு அறுவடை செய்யலாம்.
கடவூர்மற்றும் தோகைமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய்களை அறுவடை செய்து வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, தோகைமலை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு விவசாயிகள் மொத்த விற்பனைக்கு கொண்டு செல்லுகின்றனர். அங்கு ஒருகிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே மேற்படி ஆலோசனைகள கடைபிடித்து வெண்டை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.