சென்னை: கச்சத்தீவு பிரச்சனையில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் “மீனவ சங்கப் பிரதிநிதிகள் அல்லாமல் வேறு யாரையோ அழைத்துச் சென்று சம்பந்தம் பேசவா அண்ணாமலை சென்றார். பேரிடர் நிதி தருவதில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடக்கக்கூடாது. நிவாரணம் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரக்கூடியது இதில் பாரபட்சம் காட்டக்கூடாது, உரிய நிவாரணம் தர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.