மதுரை: கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட முடியாது என ஐகோர்ட் கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜூன் 21ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை மீட்க கோரி தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட் கிளையில் பதில் அளித்தார். கச்சத்தீவு தொடர்பான வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.