புதுடெல்லி: ஜி மெயிலை பயன்படுத்துபவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், அதில் ஒரு புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது கூகுள். அதன்படி, இனிமேல் தேவையில்லாத விளம்பர இ மெயில்களை சுலபமாக அகற்றிவிடலாம். உலகம் முழுவதிலும் சுமார் 180 கோடி ஜி மெயில் கணக்குகள் உள்ளன. பயனர்கள் தங்கள் மெயிலை பயன்படுத்தும் போது தேவையில்லா விளம்பர மெயில்களும் அதிகமாக இன்பாக்சில் வந்து குவிந்து தொல்லைப்படுத்தும். இது பயனர்களுக்கு சில சமயம் எரிச்சலை தரும். இந்த நிலையில் பயனாளர்களை கவர, தேவையில்லாத இ மெயில்களை சுலபமாக நீக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட்டை கூகுள் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஜி மெயிலில் புதிய டூல் ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம், மெயில் இன்பாக்ஸில் குவியும் நியூஸ் லெட்டர், வியாபார, விளம்பர இ மெயில்கள் போன்ற அவசியமற்ற மெயில்களை, மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் என்ற புதிய டேப்(TAB) கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம், நியூஸ் லெட்டர்ஸ், டீல்ஸ், வியாபாரம், விளம்பரம் தொடர்பான இ மெயில்களை எளிதில் கண்டறிந்து, வகைப்படுத்தி நீக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.
Advertisement
