சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஜூன் 10ம் தேதி கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஜூன் 11ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஜூன் 11ல் கனமழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஜூன் 12ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 10,11,12ல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
0