பெரம்பூர்: பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி வேப்பேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டிலிருந்த தைராய்டு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் மாணவியின் பெற்றோர் ஓடிவந்து படுகாயத்துடன் இருந்த சிறுமியை மீட்டு புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 கால்களும் உடைந்த நிலையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவி 10ம் வகுப்பு படித்து வருவதால் அவர் படிக்கும் தனியார் பள்ளியில் அதிகளவு வீட்டு பாடங்களை படித்துவரும்படி கூறிதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததால் மாடியில் இருந்து கீழே குதித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.