கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. நிறைவு நாளான இன்று 13 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது. பதக்கங்களுக்கான அனைத்து போட்டிகள் முடிந்தபின் இன்றிரவு 12.30 மணி அளவில் பிரமாண்டமான நிறைவு விழா நடைபெற உள்ளது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை மனு பாக்கர், பி.ஆர்.ஸ்ரீஜேஷம் ஏந்திச் செல்கின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது.