கோவை: ஜூலை 10ம் தேதி முதல் கழிவு பஞ்சு நூற்பாலை சங்கத்தினர் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கழிவு பஞ்சு நூற்பாலை சங்கத் தலைவர் அருள்மொழி தகவல் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக கழிவு பஞ்சு நூற்பாலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.