சென்னை: ஜூலை 11-ம் தேதி 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.