சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களின் விவரங்களை வழங்கவும் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வரும் 19ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.