சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், எம்.வேல்முருகன், சங்கரசுப்பு, விஜயகுமார் ரஜினிகாந்த், பார்வேந்தன், மில்டன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பேசினர். பின்னர், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை மதியம்) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம்: வழக்கறிஞர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
0