தஞ்சை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் குழு பல்வேறு தவறுகளைச் செய்துள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விசாரிக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்மானங்கள் குறித்து விசாரிக்க தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளர் தனிக் குழுவை அமைக்க நீதிபதி ஆணையிட்டுள்ளனர்.