தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பெஃப்சி இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமனம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. படப்பிடிப்பு, பட தயாரிப்பு பணிக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.