சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நீதிபதி பொன்.பாஸ்கரன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தஞ்சை மண்ணின் மைந்தரான நீதிபதி பொன்.பாஸ்கரன், கலைஞர் மீது பெருமதிப்பும், பேரன்பும் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் முதல்வராக இருந்தபோது பல்வேறு ஆணையங்களின் பொறுப்புகளிலும் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வந்தவர்.
நீதித்துறையின் தகைமை சான்ற ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தவர். அவரது மறைவு நீதித்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நீதிபதி பொன்.பாஸ்கரனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நீதித்துறையை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.