Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு: நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்பராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். இதன் காரணமாக நீதிபதிகளின் காலிப்பணிடங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. இந்நிலையில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.