பாட்னா: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மணீஷ் வர்மா நேற்று ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பீகாரின் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்தவரான ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் சர்மா. இவர் பாட்னா, பூர்னியா மாவட்டங்களின் ஆட்சி தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற மணீஷ் சர்மா பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கூடுதல் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணீஷ் சர்மா நேற்று ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
ஜேடியுவில் ஐக்கியமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
28