கோவை: நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்” என சத்குரு அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, உலக பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பொறுப்பான ஊடகவியல் என்பது ஜனநாயகத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் ஓர் சமுதாயத்தின் முத்திரை ஆகும். நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.