ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரில் நடைபெற்ற கோமாளி கார் அல்லது சோப்பு டப்பா கார் பந்தயம் காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரெட் புல், சோப்பு டப்பா கார் பந்தயம் என்ற கோமாளி கார் பந்தயம் கடந்த 2000ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரில் இந்த சோப்பு டப்பா கார் பந்தயம் நடைபெற்றது. கோமாளி தனம் நிறைந்த இந்த கார் பந்தயத்தில் பங்கேற்கும் கார்களுக்கு எஞ்சின் இருக்காது.உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் மனதிற்கு பிடித்தபடி வடிவமைக்கலாம்.