திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே மாமனை வெட்டிக் கொன்ற வழக்கில் கைதானவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் வக்கணம்பட்டியைச் சேர்ந்த திம்மராயன், அவரது மைத்துனரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திம்மராயனை வெட்டிக் கொன்று சிறை சென்று ஜாமினில் வந்த மைத்துனர் சக்கரவர்த்தியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.