செங்கல்பட்டு: மின் வாரியத்தில் பணி செய்திடும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். பிரிவிற்கு இரண்டு பேரை கள உதவியாளராக ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்கிட வேண்டும். பல ஆண்டுகளாக மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கிளை செயலாளர் தேவகுமார் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் வாரிய ஊழியர் குடும்பத்தினருடன் போராட்டம்
previous post