Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவலர்களுக்கு பணியிட மாறுதல்

சென்னை: பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை :

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவலர்களுக்கு, தங்களது பேறுகால விடுப்பிற்குப் பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம், மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.

அதன்படி, 3.6.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த மேற்கண்ட 209 பெண் காவலர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம், மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.