திருவனந்தபுரம்: லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் குரியன். அவரது மகள் ஐரின் எல்சா (25). லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோட்டயம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார். ஆனால் யாருக்கும் விசா கொடுக்கவில்லை.
இந்தநிலையில் ஐரின் எல்சாவிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த கோட்டயம் காஞ்சியார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் கட்டப்பனை போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் ஐரின் எல்சாவை கைது செய்து விசாரித்தனர். அதில் கோட்டயம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பலரை ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.