பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் நேற்று இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், செக் நாட்டு வீரர் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார். இப்போட்டியில் துடிப்புடன் ஆடிய சின்னர், 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு எளிதில் முன்னேறினார்.
மற்றொரு போட்டி, நெதர்லாந்து வீரர் டாலோன் கிரீக்ஸ்பர், அமெரிக்க வீரர் ஈதன் குவின் இடையே நடந்தது. இப்போட்டியில் இருவரும் சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடினர். முதல் 4 செட்களில் இருவரும் மாறி மாறி தலா இரு செட்களை கைப்பற்றினர். கடைசி செட்டில் டாலோன் வென்றார். அதனால், 4-6, 6-1, 6-7 (2-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற டாலோன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.