புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
1. Anaesthesia Technician: 1 இடம் (ஒபிசி). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: Anaesthesia Technician பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Audiology Technician: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500. வயது: 25க்குள். தகுதி: Hearing Language and Speech Technology பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
3. Junior Administrative Assistant: 24 இடங்கள் (ெபாது-16, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.19,900. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
4. Pharmacist: 6 இடங்கள். (பொது-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.29,200. தகுதி: பார்மசி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் மற்றும் பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
5. Respiratory Laboratory Technician: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.29,200. தகுதி: பிஎஸ்சி- எம்எல்டி யில் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Stenographer Grade II: 1 இடம் (பொது). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகள், இந்தியில் 75 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
7. Cardiographic Technician: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1). வயது; 30க்குள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: Cardiac Technology யில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. Nursing Officer: 23 (பொது-12, ஒபிசி-5, எஸ்சி-6). வயது; 35க்குள். தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சிபிடி தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். புதுச்சேரி, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, மதுரை, கோவை, சேலம், திருச்சி, வேலூர், பெங்களூரு, நெல்லை, கொச்சி, கோழிக்கோடு, கொல்லம், ஹைதராபாத், திருவனந்தபுரம், கன்னூரில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.1500. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.1200. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.https://www.jipmer.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.08.2024.