ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தமிழக மருத்துவ மாணவர் பாதியில் எரிந்த அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மாணவரின் பாதி எரிந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் மதன் 2ம் ஆண்டு தடயவியல் மருத்துவம் பயின்று வந்தார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மதன் என்ற மாணவர் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து ஜார்கண்டில் உள்ள ஆர்ஐஎம்எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் மதன் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக கூறப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவரை யாரேனும் கொலை செய்து எரித்து விட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஞ்சியில் தமிழக மாணவர் மருத்துவ கல்லூரியில் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.