சென்னை: நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் “நகைக்கடன் விதிகள் தொடர்பாக கடிதம் மூலம் வலியுறுத்தியதை தொடர்ந்து விதிகளை ஒன்றிய அரசு தளர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற சிறிய கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும், சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வதும் எனது நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
0