மும்பை: நகைக்கடைகளுக்கு சொந்தமான ரூ.315 கோடி அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. 2002-ம் ஆண்டு பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராஜ்யல் லக்கிசந்த் ஜூவல்லர்ஸ், ஆர்.எல்.கோல்டு, மன்ராஜ் நகைக்கடைக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. மும்பை, ஜல்காள், தானே, சிலோட் மற்றும் கட்ச் ஆகிய இடங்களில் உள்ள 70 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது.