சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
தங்கம், தங்க நகைகள் மீது எப்போதுமே தனி மதிப்பு மக்களிடையே உள்ளது. விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் மக்களிடையே அதிகரித்து வருகிறதே தவிர ஒருபோதும் குறைவது இல்லை. தங்க நகை அணிகலண்களாக மட்டும் இன்றி சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று(ஜூலை.01) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்ய்ப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.9,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒருகிராம் ரூ.120க்கும், ஒருகிலோ ரூ.1,20,000க்கும் விற்பனை செய்ய்ப்படுகிறது. 7 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.