டெல்லி : ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இருவரும் விரைவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. TDP கட்சியில் இவர்களுக்கு இதே பதவிவழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.