தேவையானவை
சீரக சம்பா அரிசி – 1 கப்
சீரகம் – 2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை – 1 கொத்து.
செய்முறை:
அரிசியை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் தேவையான எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது அனைத்தும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயினை நீளவாக்கில் கீறி சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. எல்லாம் நன்கு வதங்கி வந்ததும் அரிசியை இதில் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு எண்ணெயில் லேசாக வறுக்க வேண்டும். அரிசியை சேர்த்து கிளறும் போது அரிசி உடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். தற்போது ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விதத்தில், குக்கரில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு மூடிவிடவும். பின்னர் 2 விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடவும். விசில் அடங்கும் வரை காத்திருந்து பின்னர், புலாவுடன் கொத்துமல்லி தழை, நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.