ஜீப் இந்தியா நிறுவனம், ஜீப் மெரிடியன் எக்ஸ் என்ற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் வெளிவந்துள்ள இது, இந்த நிறுவனத்தின் மெரிடியன் கார் வரிசையில் குறைந்த விலை கொண்ட காராக உள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.29.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்-ல் 170 எச்பி பவரையும், 1,750 முதல் 2,500 ஆர்பிஎம்-ல் 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆம்பியண்ட் லைட்டிங், ஏர் பியூரிபையர், சாம்பல் நிற ரூப் உள்பட தோற்றம் பொலிவுபட்டதாக அமைந்துள்ளது.
ஜீப் மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்
138