ஜீப் நிறுவனம், கிராண்ட் செரோக்கி சிக்னேச்சர் எடிஷன் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 272 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.
காரில் இருந்து இறங்க வசதியாக, மோட்டார் இயக்கம் மூலம் வெளியே இழுத்துக் கொள்ளும் பக்கவாட்டு படிகள், பின்புறம் தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட்சிஸ்டம், முன்புறம் மற்றும் பின்புறம் டேஷ் கேமராக்கள் ஆகியவை இந்த ஸ்பெஷல் எடிஷனில் சிறப்பு அம்சங்களாகக் கூறப்படுகிறது. வைபை, புளூடூத் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.69.04 லட்சம். கிராண்ட் செரோக்கி லிமிடெட் ஓ வேரியண்டை விட சுமார் ரூ.1.54 லட்சம் அதிகம்.