Tuesday, February 27, 2024
Home » ஜெயங்கொண்டம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க மறுத்த விஏஓவை தாக்கியவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க மறுத்த விஏஓவை தாக்கியவர் கைது

by Arun Kumar

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது பெயரில் 20 பவுன் நகை அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானத்தில் உள்ளது. இந்த நகையை மீட்பதற்காக வாரிசு சான்றிதழ் வாங்கி தர கோரி அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் சங்கர் என்பவரை அன்பழகன் நாடி உள்ளார். சங்கர், ஏற்கனவே அதிகாரிகளிடம் பேசி பலருக்கு வருவாய் துறை தொடர்பான சான்றிதழ்களை பெற்று கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, சங்கர், நேற்று இலையூர் மேற்கு விஏஓவான தெற்கு புதுக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி குருநாதன் (40) என்பவரிடம் அன்பழகனுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி உள்ளார். அப்போது, ‘அன்பழகனுக்கு சகோதரர்கள் இருக்கும்போது அவர் பெயரில் மட்டும் வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது’ என விஏஓ மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சங்கர், விஏஓ குருநாதனை சராமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்து மயங்கி கிடந்த விஏஓவை அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi