ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம், யெஸ்டி அட்வஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளில், புதிய அல்பா 2- 334 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 29.6 எச்பி பவரையும், 29.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட தோற்றப்பொலிவுடன் உருவாக்கப்பட்ட இந்த பைக்கில் யுஎஸ்பி சார்ஜர், புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. டூயல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளது. எனினும், பின்புற வீலுக்கான ஏபிஎஸ்ஐ தேவைக்கேற்ப பயன்படுத்தவும் செயல்பட வைக்கவும் தனி சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.2.1 லட்சம்.
ஜாவா யெஸ்டி அட்வஞ்சர்
previous post