திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை வருடாந்திர ஜஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஜஷ்டாபிஷேகம் தொடங்கப்பட்டு கேட்டை நட்சத்திரத்துடன் முடிவடையும் வகையில் நடைபெறும். இதனையொட்டி கோயிலில் உள்ள சம்பங்கி பிரதட்சண பிரகாரத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் ‘அபித்யக அபிஷேகம்’ செய்யப்படும்.
இந்நிலையில், முதல் நாளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி உற்சவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சாமிருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்படும். அதன் பிறகு, உற்சவருக்கு வைரக் கவசம் அலங்கரிக்கப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளனர். 2வது நாளில் முத்து கவசமும், 3வது நாளில் திருமஞ்சனங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்படும்.