டோக்கியோ: நிலவின் வடக்கே தரையிறங்குவதற்கு ஜப்பானின் தனியார் லேண்டர் ரீசைலன்ஸ் முயற்சித்து வருகிறது. நிலவுக்கு விண்கலன்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் பணிகளில் அரசு விண்வெளி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களும் நிலவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் நிலவை ஆராய ரீசைலன்ஸ் என்ற லேண்டரை அனுப்பியது. கடந்த ஜனவரி மாதம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ரீசைலன்ஸ் லேண்டர் கடந்த மாதம் சந்திரனின் சுற்றுபாதையில் நுழைந்தது.
இந்த லேண்டர் சந்திரனின் வடக்கு மேற்புறத்தை குறி வைக்கிறது. இதன் நிழலாக உள்ள அடிப்பகுதியை விட யாரும் நெருங்காத பகுதியாகும்.மேர் ஃப்ரிகோரிஸ் அல்லது சீ ஆப் கோல்ட் சில பாறைகளைக் கொண்ட ஒரு தட்டையான பகுதியை ஐஸ்பேஸ் குழு தேர்ந்தெடுத்துள்ளது. ஆற்றல் மற்றும் தகவல் தொடர்பு பாய்ச்சலுடன் இறங்கியவுடன், 7.5அடி உயரம் கொண்ட லேண்டர் 4 சக்கரங்களை உடைய ரோவரை சந்திரனின் மேற்பரப்பில் இறக்கும்.