டோக்கியோ: ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101வது வயதில் காலமானார். டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் நேற்றுகாலை உயிரிழந்ததாக அரச குடும்பம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1923ம் ஆண்டு பிறந்த யூரிகோ தனது 18வது வயதில் பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவை திருமணம் செய்து கொண்டார். 1945ம் ஆண்டு போரின் இறுதி மாதங்களில் அமெரிக்காவின் குண்டுவெடிப்பில் அரண்மனை தரைமட்டமானபோது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் முகாமில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜப்பான் இளவரசி யூரிகோ மரணம்
0