ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்திற்கு உட்பட்ட கடலோர பகுதியான நோட்டோவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12.51 மணி) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1.2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பியது. அந்த நிலநடுக்கமானது 7.6 ரிக்டர் அளவில் பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மதியம் தொடங்கி இன்று காலை வரை 155 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டில் ஸ்தம்பித்து நின்ற ஜப்பான்… ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கம் : 48 பேர் உயிரிழப்பு!!
180