Wednesday, February 28, 2024
Home » ஜனவரி 7ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக ஒத்திவைப்பு!

ஜனவரி 7ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக ஒத்திவைப்பு!

by Suresh

சென்னை: ஜனவரி 7-ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03 / 2023 மற்றும் 03A / 2023ன் படி 07.01.2024 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்/ வட்டார வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.01.2024 அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்விற்க்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் என விண்ணப்பதாரர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi