பூந்தமல்லி, நவ. 23: மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2024-25 நிதி ஆண்டிற்கு 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக 453 பேருந்துகளுக்கு கடந்த ஜூலை 18ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டு, அதில் 371 பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமுள்ள 82 பேருந்துகள் டிசம்பர் 2024க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், நேற்று ரூ.341 கோடி மதிப்பீட்டில், 1,475 பேருந்து அடிச்சட்டங்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த அடிச்சட்டங்கள் கூண்டு கட்டி, ஜனவரி 2025 முதல் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.